மீன்கள் இல்லை:மூடப்படும் சந்தைகள்!



எரிபொருள் தட்டுப்பாட்டல் வடகிழக்கில் மீன் சந்தைகள் பலவும் மூடப்பட்டுவருகின்றது.

அதேவேளை சந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, விளைமீன் கிலோ ஒன்று 2,200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், இறால் கிலோ 2400 ரூபாவாகவும் ,சாதாரண சூடை மீன் 800 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, மீன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மாதத்தின் ஒரு நாள் மட்டும் படகிற்கான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

No comments