இலங்கை: கோழியின் விலை வானில் பறக்கிறது!இலங்கையில் ஒரு கிலோ தோலில்லாத கோழிக்கறியின் சில்லறை விலை ரூ. 1250 ஆக எகிறியுள்ளது.

சில்லரை விலையில் முட்டை ஒன்றின் விலையும் 45 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வரை, கோழி உற்பத்தி 30% மற்றும் முட்டை உற்பத்தி 40% குறைந்துள்ளதாகவும், பண்ணைகள் மூடப்படுவதாகவும் அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

ஏப்ரல் மாத இறுதியில் ஒரு கிலோ கோழிக்கறியின் சில்லறை விலை 980 ரூபாவாக இருந்தது.

No comments