யாணையின் உடல் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் வனஜுவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளி சுற்றுவட்டாராக் காரியாலயத்திற்குட்பட்ட மாலையர்கட்டு கிராமத்தின் வயல் பகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்றின் உடல் இன்று (27) மீட்கப்பட்டுள்ளதாக வன ஜுவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளி சுற்று வட்டாராக் காரியாலயலத்தின் உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

அதாவது,  வயற்பகுதியில் யானை ஒன்று வீழ்ந்து கிடப்பாதாக அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, அங்கு விரைந்து சென்ற வனஜுவராசிகள் பாதுகாப்பு உத்தியேகஸ்த்தர்கள் யானை உயிரிழந்து கிடப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த யானை தொடர்பில் நீதிமன்ற உத்தரவைப் பெபற்று பிரேத பரிசோதனையின் பின்னர்தான் என்ன காரணத்திற்காக குறித்த யானை உயிரிழந்துள்ளது என்பதை அறிய முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் மிகநீண்ட கலமாக இவ்வாறு காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது புகுந்து அங்குள்ள பயிரினங்களை துவம்சம் செய்து வருவதோடு, பல மனித உயிர்களையும் காவுகொண்டு வருகின்றன.

தற்போதைய நிலையில், அப்பகுதியில் சிறுபோக வேளாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நிலையில் வேளாண்மைச் செய்கையை காட்டுயானைகள் அழித்து வருவதும் குறிப்பிடத்தகக்கதாகும்.

No comments