விமலின் மனைவிக்கு சிறை:புதிய கூட்டணியாம்?முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டு வழக்கில் விமலின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் மேற்​கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புதிய அரசியல் கூட்டணி ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் பூரண சம்மதத்துடன் சுயாதீன கட்சிக்கு என்று தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments