பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜின் நினைவு வணக்கம்


பிரிகேடியர் பால்ராஜ் 14 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் மிச்சம் பகுதியில் முன்னேடுக்கப்பட்டது.

நிகழ்வினில் பொதுசுடரினை தனரட்ணம் பியா ஏற்றிவைத்து நிகழ்வானது ஆரம்பமானது.

ஈகைச்சுடரினை நடன ஆசிரியர் சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அகவணக்கத்தினை தொடர்ந்து திரு உருவப்படத்திற்க்கான மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் இடம் பெற்றது.

நடன நிகழ்சிகளை ஆசிரியை சாமினி கண்ணன் அவர்களின் மாணவிகள் , வல்வை திருகோயில் மாணவிகள் மற்றும் நாட்டியாலயா மாணவிகளும் வழங்கியிருந்தார்கள்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு நியூட்டன் அவர்களின் உரையும் இடம்பெற்றது. உறுதி மொழியோடு நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments