விமல் வீரவன்சவின் மனைவி பிணையில் விடுவிப்பு


போலி ஆவணங்களை பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமல் வீரவங்க்ஷவின் மனைவி சஷீ வீரவங்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இரண்டு வருடகால சிறைத்தண்டனை பெற்றிருந்த விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்குட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக  மேன்முறையீடு செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனை நேற்று இடம்பெறவிருந்த நிலையில், அவரது பிணை கோரிக்கை மனு இன்றுவரை வரை பிற்போடப்பட்டது.

இந்நிலையில், சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் ஆஜராகியிருந்த நிலையில், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

No comments