யாழ் நகரில் எரிந்து சாம்பலானது வர்த்தக நிலையம்

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்தது.

இன்று அதிகாலை 2.30 மணிளவில் விற்பனை நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவி கடை முழுவதும் பரவி முழுமையான சேதத்தை ஏற்படுத்தியது.  கடையில் தங்கியிருந்த ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதனையடுத்து தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக யாழ் மாநகர சபை தீயணைப்பு படை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments