963 அமெரிக்க மற்றும் கனேடிய குடிமக்களுக்கு ரஷ்யா தடை விதிப்பு!


அமெரிக்காவில் உள்ள முக்கிய நபர்கள் 963 பேருக்கு ரஷ்ய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. 

இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர்  கமலா ஹாரிஸ், ஹிலாரி கிளிண்டன், நடிகர் மோர்கன் ஃப்ரீமேன், ஜார்ஜ் சொரோஸ் மற்றும் முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட பலர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட புதிய பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மறைந்த அமெரிக்க செனட்டரும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான ஜான் மெக்கெய்னும் இடம்பெற்றுள்ளார்.

இதேநேரம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த ரஷ்ய பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்படவில்லை.

ரஷ்ய வெளியுறவுத்துறை இணையதள பக்கத்தில் தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளன. உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா எடுத்த விரோத நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பட்டியலில் பெயரிடப்பட்டவர்களில் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிற முன்னணி நபர்களும் அடங்குவர்.

ஏற்கனவே அமெரிக்கா விதித்த தடைக்கு எதிர் நடவடிக்கையாகும். 

புதிய பட்டியலில் உள்ள பலரை குறிவைத்து மாஸ்கோ ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தது. குறிப்பாக பிடென், அவரது வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பென்டகனின் தலைவர் லாயிட் ஆஸ்டின் மற்றும் ஜுக்கர்பெர்க் உள்ளடங்குகின்றனர்.

கனேடிய பிரதமரின் மனைவி சோஃபி ட்ரூடோ உட்பட மேலும் 26 முக்கிய கனேடியர்களுக்கு தடை விதித்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது அரசாங்கம் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 உறுப்பினர்கள் அங்கு பயணம் செய்ய தடை விதிக்கும் மசோதாவை கனடா அறிமுகப்படுத்திய நான்கு நாட்களுக்குப் பிறகு ரஷ்யாவின் தடை செய்யப்பட்ட கனேடியர்களின் புதிய பட்டியல் வெளிவந்துள்ளது.

கிரகத்தின் மற்றைய பகுதிகளில் ஒரு புதிய காலணத்துவ உலக ஒழுங்கை திணிக்க முற்படும் அமெரிக்காவை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அதன் நிலையை மாற்றவும் புதிய புவிசார் அரசியல் யதார்த்தங்களை அங்கீகரிக்கவும் இத்தடை கொண்டுவரப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments