எம்-777 பீரங்கி எறிகணைக்கான ஆயுதக் கிடங்கு அழிப்பு என ரஷ்யா தெரிவிப்பு

உக்ரைனின் ஆயுதக் கிடக்கு மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டொன்பாஜ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கு மீதே தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பான எம்-777 ஹோவிட்சர்களுக்கான (155 மி.மீ பீரங்கிகள்) எறிகணைகள் சேமித்து வைத்த ஆயுதக் கிடங்கே தாக்கி அழிக்கப்பட்டது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட எம்-777 ஹோவிட்சர் பீரங்கிகள் உக்ரைனில் சண்டை நடைபெறும் முன்னரங்கத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. உக்ரைக்கு அமெரிக்கா 90 இத்தகைய பீரங்கிளை வழங்கியதாகக் கூறுகிறது. இதில் ஒரு பீரங்கி மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் படை எடுப்பைத் தடுக்க அமெரிக்கா வழங்கிய ஆயுதச் செலவுகளில் இதுவே மிகப் பொிய தொகையாகும். நீண்டதூரம் (40 கி.மீ) தூரம் சென்று துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

இதேநேரம் அமெரிக்கா வழங்கிய எம்-777 பீரங்கித் தொகுதிகளை நேற்றுத் திங்கட்கிழமை தாக்கியழித்தாக ரஷ்யா கூறியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது,

எனினும் இத்தகவலை சுயாதீனமாக உறுதிய செய்யமுடியவில்லை என ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன.


No comments