மண்ணெய் அமைச்சரானார் டக்ளஸ்!இந்திய அரசாங்கத்தினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கி வைக்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணை வந்தடைந்துள்ள நிலையில், அவை ஊர்காவற்துறையில் இன்று அரச அமைச்சர் டக்ளஸினால் ஊடகங்கள் முன்னால் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதனிடையே சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் 11பரல்களில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.

சுமார் 2ஆயிரத்து 200 லீற்றர் மண்ணெய்,பெற்றோல் மற்றும் டீசல் மீட்கப்பட்டுள்ளது.

ஐகதானவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து முறைகேடாக எரிபொருளை பெற்று பதுக்கியுள்ளார்.

அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனைவி பேருவளை கலாவில கந்தேனிவாச என்ற இடத்தில் சட்டவிரோதமான முறையில் பெற்றோலை அதிக விலைக்கு விற்பனை செய்யும் போது பெற்றோல் கையிருப்புடன்  கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில், கணவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது கொண்டு வரும்  பெற்றோலை தான் விற்பனை செய்வதாகக் கூறியுள்ளார்.


No comments