நடேசனிடமே அனைத்தும் உண்டு!முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் பெரும்பாலான சொத்துகள் திருக்குமரன் நடேசன் பெயரில் தான் பதுக்கப்பட்டுள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

"நாட்டை நாசமாக்கிய திருட்டுக்கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தல்" எனும் தொனிப்பொருளின் கீழ் " ஊழல் எதிர்ப்புக் குரல்" எனும் அமைப்பால் கொழும்பு மன்றத்தில் இன்று விசேட ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் ஊழல் மோசடிகள் குறித்த தகவல்களை அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்தினார். பெருமளவான ஆவணங்களும் ஊடக சந்திப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
அரச பீடத்தில் இருப்பவர்கள் நாட்டைப் பற்றியும் மக்கள் பற்றியும் சிந்திக்கவில்லை. மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் இவர்கள் மீண்டும் ஆட்சி பீடத்துக்கு வரவேண்டாம் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருக்குமரன் நடேசன் யாழ். அராலியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments