அரசாங்கத்தில் இருந்து விலகுவாராம்- ஹரின் பெர்னாண்டோ



இலங்கையில் 20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று (23) சமர்ப்பிக்காவிட்டால் இன்றிரவு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்த வரைவு இன்று அமைச்சரவையில் நிச்சயமாக முன்வைக்கப்படும் என தெரிவித்த அவர், இதற்கு எதிராக யார் சதி செய்தாலும் அது வெற்றியடையாது எனவும் தெரிவித்தார்.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் உரிய அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் சார்பாக தமது கடமையை ஆற்றுவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய அமைச்சராக இன்று பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு மையப்படுத்தப்பட்ட பல அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு மீளவும் பெற்று சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தவும் 21வது திருத்தம் ஊடாக முயற்சி செய்யப்படுகிறது.

No comments