முல்லை,வவுனியாவில் ஆவாவாம்? ஆவா குழு பேரில் கொலை துண்டுபிரசுரங்களை வெளியிட்டதாக ஜவர் முல்லைதீவில் கைதாகியுள்ளனர்.

இதனிடையே வவுனியா - ஓமந்தை கோதண்டர், நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று  மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments