தீவுகளில் இந்திய அதிகாரிகள்!

 


இலங்கை -இந்திய புதிய கூட்டு ஒப்பந்த பிரகாரம் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, அனலைதீவு, மற்றும் நயினாதீவு பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள மீள்புதுப்பிக்க மின்சக்தி திட்ட அமைவிடங்களை இந்திய துணைதூதரக அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மின்பிறப்பாக்கி மூலம் மட்டுமே மின்விநியோகம் வழங்கப்பட்டு வந்திருந்த நிலையில் காற்றாலை மூலமாக மீள்புதுப்பிக்கதகு சக்தித்திட்டத்திற்கு இந்தியாவின் தனியார் நிறுவனமொன்று முதலிட முன்வந்துள்ளது.

இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் திட்ட அமைவிடங்களை நேற்றைய தினமான வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டுள்ளனர்..

நெடுந்தீவு, அனலைதீவு, மற்றும் நயினாதீவு பகுதிகள் தமிழகத்தை அண்மித்த தீவுப்பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments