தமிழ்க் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. லோகானந்தம் அவர்களுக்கு மதிப்பளிப்பு

தமிழ்க் கல்விக்கழகம் யேர்மனியின் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியக்

கிளை அவரின் 30 வருடகால கல்விப்பணியினைப் பாராட்டி மதிப்பளித்தது.

30.4.2022 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் நடைபெற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் 32 ஆவது அகவை நிறைவு விழாவின் போது இந்த மதிப்பளிப்பினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் சிறப்பாக நடாத்தியிருந்தனர்.

திரு லகானந்தம் அவர்கள் 1992 இல் இருந்து 2000 ஆண்டுவரை ஸ்ருட்காட் தமிழாலயத்தின் நிர்வாகியாகவும் 2000 ஆண்டில் இருந்து 2012 வரை தழிழ்க்கல்விக் கழகத்தின் செயலாளராகவும் 2012 இல் இருந்து பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் நிர்வாகத் திறமைதனைப் பாராட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகத்தின் பொறுப்பாளர் திரு பொன் மகேஸ்வரன் அவர்கள் செம்மையாளன் எனும் விருதுப்பட்டையம் வழங்கி மதிப்பளித்ததுடன். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையின் முத்திரை முன்பக்கமாகவும், தமிழ்க் கல்விக் கழகத்தின் முத்திரை பின்பக்கமாகவும் பதிக்கப்பட்ட பதக்கமும் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டார்.

No comments