மரியுபோல் உருக்கு ஆலையில் 1730 போராளிகள் ரஷ்யாவிடம் சரண்


மரியுபோல் துறைமுக நகரில் அமைந்துள்ள உருக்கத் தொழிற்சாலையான அசோவ்ஸ்ட் ஆலையிலிருந்து இருந்து இதுவரை 1730 உக்ரைனியப் போராளிகள் ஆயுதங்களைக் கீழெ போட்டுவிட்டு சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 771 போராளிகள் ஆலையிலிருந்து சரணடைந்துள்ளனர் என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் கூறியுள்ளது. 

இதுவரை வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,730 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்தவர்களில் 80 பேர் காயமடைந்திருந்ததாகவும் சிகிச்சை தேவைப்படும் அனைவரும் நோவோசோவ்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மருத்துவமனைகளில் உதவி பெறுவதாகவும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு கூறியுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்  நூற்றுக்கணக்கான உக்ரேனிய போர்க் கைதிகளை மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் ஆலையில் இருந்து பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறது.

900 க்கும் மேற்பட்ட உக்ரேனிய போராளிகள் டொனெட்ஸ்கில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு முன்னாள் சிறை காலனிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது.



No comments