உக்ரைனை உடனே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கு குறுக்கு வழி எதுவும் இல்லை - யேர்மன்


ரஷ்யப் படையெடுப்புப்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த முடியாது என யேர்மனி சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்திற்கு முன்னதாக ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. உக்ரைனுக்கு விதிவிலக்கு அளித்தால், அது பால்கன் நாடுகளுக்கு அநீதி ஏற்பம் என அவர் வாதிட்டார்.

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடு வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முன்னு எச்சரித்திருந்தார். இதனையே யேர்மனி சான்சிலரும் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், அல்பேனியா, போஸ்னியா, செர்பியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் கொசோவோ ஆகிய மேற்கு பால்கன் நாடுகளின் விண்ணப்பங்களை விரைவுபடுத்துமாறு ஷோல்ஸ் அழைப்பு விடுத்தார்.

பல ஆண்டுகளாக அவர்கள் தீவிர சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இணைவதற்கு தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது, நமது நம்பகத்தன்மையின் கேள்வி மட்டுமல்ல, இன்று முன்னெப்போதையும் விட அவர்களின் ஒருங்கிணைப்பு நமது மூலோபாய நலன்களிலும் உள்ளது என்றார்.

No comments