விலைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!



ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளை அதிக விலை கொடுத்துவாங்கி பேரம் பேசும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் மக்களுடைய உரிமைகள் உணர்வுகள் எல்லாம் விற்பனைப் பொருளாக மாறி இருக்கின்றன. விலைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இனங்கண்டு மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஜக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே முருகவேல் சதாசிவம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷவின் பாதுகாவலர்களாக ரணில் விக்கிரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ஷ தான்தோன்றித்தனமாக நியமித்துள்ளனர்.ஆள் மாற்றம் இடம்பெற்றுள்ளதே தவிர ஆட்சி மாற்றம் இடம்பெறவில்லை. மக்களுடைய கோரிக்கைகளை செவிசாய்க்காமல் ஒரு அரசியல் நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.


தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க மிகப் பெரிய குற்றங்களை செய்வதற்கு முனைகின்றார்.ஏனைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கி ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.


ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளை அதிக விலை கொடுத்து வாங்கி பேரம் பேசும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் மக்களுடைய உரிமைகள் உணர்வுகள் எல்லாம் விற்பனைப் பொருளாக மாறி இருக்கின்றன. விலைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இனங்கண்டு மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.


ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கான அதிகாரத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை எடுக்க முனையவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்து ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையை கண்காணித்து சிறந்த ஆட்சி அமைக்க உறுதுணையாக இருப்போம் என்றார்.

No comments