வாழ தலைப்பட்டுள்ள கூட்டமைப்பு?இலங்கையில் தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருப்பது ராஜபக்சக்களது ஆட்சியேயென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசப் போகின்றேன் எனக் கூறிக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் மக்களுக்காக பயன்படுத்தாது எதிர்கட்சித் தலைவர் பதவியையும் அரச சுகபோகங்களையும் அனுபவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றப் போகிறார்கள்.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் அல்லது ஏனைய பொறுப்பான பதவிகளை வகிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு விருப்பம் இருக்கிறது.

ஆனால் யாருக்கு வழங்குவது என அவர்களுக்குள்ளே முரண்பாடு இருப்பதால் அதனைப் பெற்றுக் கொள்ளாமல் ஏதோ ஒரு வகையில் சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள எனவும் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.


No comments