முகவர்கள் சகிதம் இந்திய நிவாரணம்!



இந்தியாவின் மனிதாபிமான உதவித் திட்டங்களின் மூலம் வடக்கு மாகாண மக்களுக்கு தேவையான  உதவிப் பொருட்களை வழங்குவதற்கான  நிகழ்வு, இன்று (27 மே 2022)  முல்லைத்தீவில் இடம்பெற்றது. 

யாழ். இந்தியத் துணைத் தூதுவர் மாண்புமிகு ராகேஷ் நட்ராஜ் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கே .விமலநாதன்இணைந்து மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவுக்கான  2,50,000 கிலோ அரிசி மற்றும் 2250 கிலோ  பால்மா உதவிப் பொருட்களை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.  

இந்த உதவித் திட்டம் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் சுமார் 28,000 குடும்பங்கள் பயனடையும். எதிர்வரும் காலங்களில் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பொருள்களின் விநியோகம் ஆரம்பிக்கப்படும். 

  இந்திய உதவியின் பகுதியாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் பயனடைவார்கள். 40,000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 500 மெட்ரிக் டன் பால் பவுடரை உள்ளடக்கிய இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் உதவியின் ஒரு பகுதியாக இது விரைவில் தீவு முழுவதும் விநியோகிக்கப்படும்.


No comments