சிங்கள அரசியல்வாதிகளிற்கு இந்திய பாதுகாப்பு!இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய இராணுவ பாதுகாப்பு கோரிய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரது கோரிக்கை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு தரப்பால் முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்பதால், தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பில், தான் திருப்தி அடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் தாக்குதலையடுத்து தேடி தேடி அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதும் மகிந்த குடும்பத்துடன் தப்பித்து ஓடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


No comments