அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட 21 பேர் பலி


அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 18 பள்ளி மாணவர்களும் உட்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் சான் அன்டோனியோவிற்கு மேற்கே 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ராப் எலிமெண்டரி பள்ளியில் 18 வயது துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது.

துப்பாக்கிதாரி கொல்லப்பட்டார். துப்பாக்கிதாரி உவால்டேயில் வசிக்கும் 18 வயது ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்  அவர் தனது வாகனத்தை கைவிட்டு உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளிக்குள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

No comments