கொழும்பில ஆர்ப்பாட்டம்:பதற்றம்!ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு உலக வர்த்தக மையத்துக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகிறது.

யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள்  ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோ கோத்த கம  எழுற்சி - 50- வது நாள் நிறைவை முன்னிட்டு நடைபெறும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கு கொண்டனர் . இப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டும். இந்த கொலைகாரப் பொறிமுறையில் மாற்றம் வேண்டும். என்ற கோஷங்களும் முன் வைக்கப்பட்டன .
No comments