ஹார்பூன் ஏவுகணைகளையும், ஹோவிட்சர் பீரங்கிளையும் பெறத்தொடங்கியது உக்ரைன்


டென்மார்க்கிலிருந்து கப்பல் எதிர்ப்பு ஹார்பூன் ஏவுகணையும் அமெரிக்காவிடம் இருந்து ஹோவிட்சர்கள் என்று அழைக்கப்படும் பீரங்கிகளையும் பெறத்தொடங்கியுள்ளதாக உக்ரைனிய பாதூகப்பு அமைச்சர்ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆயுதங்கள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடும் படைகளை வலுப்படுத்தும். நமது நாட்டின் கடலோரப் பாதுகாப்பு ஹார்பூன் ஏவுகணைக்கொண்டு பயிற்சி பெற்ற உக்ரேனிய அணிகளால் பயன்படுத்தப்படும். தெற்கு துறைமுகமான ஒடேசா உட்பட நாட்டின் கடற்கரையை பாதுகாப்பதில் கரையிலிருந்து ஏவப்படும் உக்ரேனிய நெப்டியூன் ஏவுகணைகளுடன் டென்மார்க்கின் ஹார்பூன் எதிர்ப்பு கப்பல் ஏவுகணைகள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.

No comments