மன்னாரில் மர்ம மரணம்! வாகனத்தில் பயணித்த இருவர் மர்மமான முறையில் இறந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நேற்று மன்னார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது 26) காட்டாஸ்பத்திரியைச் சேர்ந்த எம்.மசூர் (வயது 35) ஆகிய இருவருமே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து 4 பேர் நேற்று கொழும்பு நோக்கி புறப்பட்ட வேளையில் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர் வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக இருவரும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

No comments