புகையிரத விபத்தில் வர்த்தகர் மரணம்!


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் ரயிலில் மோதுண்டு வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயதான அரவிந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

No comments