இணக்கம் என்கிறார் விமல்!நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச இந்த யோசனைக்கு ஜனாதிபதியும் பிரதமரும் சாதகமான விதத்தில் பதிலளித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாகவும்;  அதற்கு அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நானும் உதயகம்மன்பில வாசுதேவ நாணயக்காரவும் டிரால் அலசும் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில்கொள்ளும் தற்போதைய அமைச்சரவை தொடர்ந்தும் நீடிக்க முடியாது என கருதுகின்றோம், இதன் காரணமாக அமைச்சரவையை கலைத்துவிட்டு அனைத்துகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments