கேகாலையில் பதற்றம்:இராணுவம் வரவழைப்பு!இலங்கை காவல்துறையால் கேகாலை ரம்புக்கனையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு தொற்றியுள்ளது.

ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது 19ம் திகதி அன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற உள்ள நிலையில் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இறுதிக் கிரியைகள் முடித்து இறுதி ஊர்வலம் நடைபெறும் போது ஏற்படும் நிலமைகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் பிரதேசத்தின் பாதுகாப்புக்காக பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைய இராணுவத்தினர் இன்று (22) அப்பகுதிக்கு வரவழைக்கப்படவுள்ளனர்.

No comments