தென்கிழக்கு லண்டனில் கத்திக்குத்து: வீட்டினுள் நால்வர் உயிரிழப்பு!


தென்கிழக்கு லண்டனில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். 

பெர்மண்ட்சேயில் (Bermondsey) பகுதியில் டெலாஃபோர்ட் வீதியில் (Delaford Road) அமைந்துள்ள வீட்டினுள் கத்திக்குள் உள்ளாகிய நிலையில் நான்கு பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குகின்றனர். ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்த போது நால்வரும் கத்திக்குத்துக்கு உள்ளாகிய நிலையில் சடலங்களாக காணப்பட்டனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் பெர்மண்ட்சேயில் அமைந்துள்ள வீட்டில் பிரச்சினை குறித்து காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் போில் 20 வயது மதிக்கத்தக்க நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட நால்வரையும் ஏற்கனவே தெரியும் என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

சிறப்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 60 வயதுக்குட்பட்ட ஒரு பெண் மற்றும் ஆண், 40 வயதுடைய ஒரு பெண் மற்றும் 30 வயதுடைய மற்றொரு பெண்ணாகவும் இருக்கலாம் என்று பெருநகர காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் கொலின் விங்ரோவ் இன்று சம்பவ இடத்தில் உறுதிப்படுத்தினார்.

பெருநகர காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் கொலின் விங்ரோவ் மேலும் தெரிவிக்கையில்:-   

சம்பந்தப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம், இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

ஆனால் அவர்கள் தொடர்பான ஏனைய விபரங்கங்கள் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை்.

அகருகில் உள்ள குடியிருப்பாளர் தெரிவிக்கையில்:

ஒரு பெண்ணின் அலறும் சத்தம் 5 நிமிடங்கள் வரை செவிமடுத்தேன். பின்னர் நோயாளர் காவுவண்டி மற்றும் உலங்கு வானூர்தி சந்தத்தை செவிமடுத்ததும் பிரச்சினை தீவிரமானது என்பதை உணர்ந்தேன்.

ஏறக்குறைய எட்டு அல்லது ஒன்பது ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் வெளியே வந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைப்பதை நான் பார்த்தேன். யாரோ யாரையாவது பணயக்கைதியாக வைத்திருக்கிறார்களோ அல்லது ஏதோவொன்றாகவோ என்று நினைத்தேன்.

டெலாஃபோர்ட் வீதியை மறித்து இரும்பிலான தடுப்புகள் போடப்பட்டன. வீட்டுக்கு வெளியே நான்கு தடயவியல் கூடாரங்கள் அமைக்கப்பட்டன.

மற்றொரு குடியிருப்பாளர் கூறுகையில்:- 

காவல்துறையினர் தங்களின் வாகனங்களில் துப்பாக்கிளுடன் குதிப்பதைப் பார்த்தேன். சுமார் 8 காவல்துறை மகிழுந்துகள் மற்றும் பல நோயாளர் காவு வண்டிகளும் அங்கு தரித்து நின்றன.

நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா என்பதை பார்க்க காவல்றையினா எங்களின் பின் வீட்டு தோட்டப் பகுதியால் வந்து உறுதிப்படுத்தினர். அவர்கள் வேறு எதையும் கேட்கவில்லை. ஆனால் என் கணவர் கத்திக் கூச்சல் இட்ட சத்தம் கேட்டது என காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

No comments