ஆரம்பமானது பிரான்ஸ் அதிபர் தேர்தல்!! முடிவுகளை 8 மணி முதல் எதிர்பார்க்கலாம்


பிரான்ஸ் அந்நாட்டு அதிபரைத் தேர்ந்தெடுக்கும் அதிபர் தேர்தலில் இன்று ஞாயிற்றுக்கிழமை வாக்களிக்கத் தொடங்கியுள்ளது.

அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவல் மக்ரோன் தனது போட்டியாளரான மரீன் லு பென்னை எதிர்கொண்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான அணுஆயுத நாடான பிரான்சில் வாக்களிப்பதன் விளைவு முழு ஐரோப்பிய கண்டத்தையும் பாதிக்கும், ஆனால் உக்ரைனில் உள்ள மோதலையும் பாதிக்கலாம், ஏனெனில் இராஜதந்திர முயற்சிகளிலும் பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவிலும் பிரான்ஸ் முக்கிய பங்கு வகித்துள்ளது. 

48.8 மில்லியன் தகுதியுள்ள வாக்காளர்களில் எத்தனை பேர் வாக்குச் சாவடிகளில் வருகிறார்கள் என்பதைப் பொறுத்து இன்றைய முடிவுகள் அமைய இருக்கின்றன.

வாக்குச் சாவடி நிலையங்கள் பெரும்பாலும் இரவு 7 மணிக்கு மூடப்படும். சில முக்கிய நகர்புறங்களில் இரவு 8 மணி வரை வாக்குச் சாவடி நிலையம் திறந்திருக்கும்.


பிரான்சில் வாக்களிப்பதற்கு காகித உறைகளில் ஒட்டப்பட்ட வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துகிறது. அத்துடன் 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வாக்களிப்பு மோசடி அச்சம் காரணமாக அஞ்சல் மூலம் வாக்களிப்பது தடைசெய்யப்பட்டது. 

வெளிநாட்டில் வாழும் பிரெஞ்சு மக்கள் தூதரகங்கள் அல்லது துணைத் தூதரகங்களில் வாக்களிக்கின்றனர். ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த அதிபர் தேர்தலில் 7 வீதமானவர்கள் தங்கள் சார்பாக வாக்களிக்க மற்றொருவரை உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளனர்.

வாக்காளர் வாக்குச் சாவடியில் தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றனர். திரைச்சீலையால் மூடப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குச் சீட்டில் வாக்காளரைச் தெரிவு செய்து வாக்குச் சீட்டு உறையில் வைத்து அதை பொது இடத்தில் அமைந்துள்ள வாக்குப் பெட்டியில் போடுகின்றனர். வாக்களிக்க அவர்கள் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் அவரின் பெயர் இருக்கும் இடத்தில் கையெழுத்திட வேண்டும்.

இயந்திர வாக்குப்பதிவு சோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய இயந்திரங்கள் வாங்குவது 2008 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள 35,000 நகராட்சிகளில் சுமார் 60 நகரங்கள் மட்டுமே இன்னும் அவற்றைப் பயன்படுத்துகின்றன.

தேர்தல் முடிவுகளை இன்றிரவு 8 மணி முதல் எதிர்பார்க்கலாம்.

No comments