வடகிழக்கில் கல்வி, நிர்வாகம் பாதிப்பு!

இன்றைய தினம் இலங்கை முழுவதும் அழைப்புவிடுக்கப்பட்ட கடை அடைப்பினால் வடக்கிலுள்ள பாடசாலைகள்,அரச திணைக்களங்கள் செயலிழந்து போயுள்ளன.

இதனிடையே பாடசாலை ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்று கவனத்தை ஈர்த்துள்ளனர.


யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இன்று மாட்டு வண்டில்களில் பாடசாலைக்கு சென்றனர்.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் இவ்வாறு மாட்டுவண்டில்களில் பாடசாலைக்குச் சென்றனர்.No comments