முஸ்லீம்களிற்கு சாணக்கியனின் ஜயாயிரம்?



இன்றைய தினம் பாராளுமன்றத்தில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு இரா.சாணக்கியன் வழங்கிய ஜயாயிரம் ரூபாய் பணத்தாள் பேசுபொருளாகியுள்ளது.

20 ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து ஜனாதிபதிக்கு பாராளுமன்ற அதிகாரத்தை வழங்கி விட்டதோடு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு மீண்டும் சுயாதீனமான செயல்படுகின்றேன் என்னும் போர்வையில் அரசோடு இணைந்து அதரவளிப்பதே இவரது நோக்கம்.  அதன் காரணமாகவே முஸாரப் எனும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஓர் சலுகையாக 5000 வழங்கியதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



இதனிடையே முன்னாள் அமைச்சர் காமினி  லொக்குகேயின் பிலியந்தல   வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அதே போன்றே நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டிற்குள் சுமார் 300 பேர் நுழைந்து வீட்டிற்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலனறுவையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அவரது வீட்டை நோக்கி சென்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிலேயே நேற்றிரவு வரை இருந்ததாக பொலிஸார்; தெரிவித்தனர்.

தலை தெறிக்க தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினர் எங்கிருக்கின்றார் என தெரியாத அதேவேளை பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகத்தை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments