கோத்தாவின் வலது கரமும் தப்பித்தோடியது!கோத்தபாய ராஜபக்சவின் வலதுகரமான அவன்ட் கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளனர்.

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து அவர்கள் மாலைதீவிற்கு சென்றுள்ளனர்.

நேற்று காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட யுஎல்- 102 சிறீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் மாலைதீவு சென்றுள்ளனர்.

அவர்கள் நாட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கு உதவும் வகையில் விமானநிலையத்தின் கணணி அமைப்பு முறையும்,பாதுகாப்பு கமராக்களும் திட்டமிடப்பட்டு செயல் இழக்கச்செய்யப்பட்டன என தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே பட்டத்து இளவரசர் என அடையாளப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த அன்றே துபாய் சென்றுள்ளார் .

அவரது மனைவி மகன் உட்பட குடும்பத்தவர்கள் இரண்டாம் திகதி மாலைதீவு சென்றுள்ளனர்.

நாமல்ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்

அவரது குடும்பத்தினர் துபாயிலிருந்து மேற்குலகநாடொன்றிற்கு செல்வார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தமக்குள்ள ராஜதந்திரிகள் கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டு அவர்கள் தப்பித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments