முடங்கியது கொழும்பு!


இன்றைய முடக்க போராட்ட அழைப்பால் முற்றாக முடங்கியது. கொழும்பு கோட்டை மற்றும் பெட்டா.

இதனிடையே இன்றைய போராட்ட வெற்றி பற்றி கருத்து தெரிவித்துள்ள மனோகணேசன்"தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பெருந்தோட்ட தொழிற்சங்க உடன்பிறப்புகள் ஏனைய சகோதர உழைக்கும் மக்களுடன் இணைந்து, ராஜபக்ச அரசுக்கு எதிரான முற்றுமுழுதான நாடு தழுவிய வேலை நிறுத்த எதிர்ப்பியக்கத்தில் அமைதியாக உற்சாகத்துடன் பங்கு பெறுகிறார்கள் என்ற செய்தி மலையகம் முழுக்க இருந்து வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.

இலங்கை தேசிய பரப்பில் நாம் ஒதுங்கி இருந்த காலம் இன்று முடிவுக்கு வந்து விட்டது. இரண்டும் கெட்டான் காரணங்களை சொல்லி எமது மக்களின் பங்குபற்றலையும், இருப்பையும் சிதைக்க முயன்ற கோமாளிகளை தோல்வியடைய செய்து நமது மக்கள் அணி திரள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.No comments