சி.வி ஆதரவு:சுரேன் வெளியே!!



அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே  அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

இன்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments