ஆங்சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை!!


மியான்மரில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் ஆங்சான் சூகிக்கு கையூட்டு வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மியான்மரில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராணுவப் புரட்சிக்குப் பின் ஆங்சான் சூ கி பதவியில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 6 இலட்சம் டொலர்கள் பணம், மற்றும் தங்கக் கட்டிகளை கையூட்டாகப் பெற்றதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் அவருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையும் அளித்துள்ளது. இராணுவத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டது, கொரோனா விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவருக்கு ஏற்கெனவே ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

No comments