உக்ரைன் படையினர் பிணைக் கைதிகளாக கொண்டு சென்ற ரஷ்யப் படையினர்!


உக்ரைன் - ரஷ்யா இடையே துருக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து படைகளை குறைக்க ரஷ்யா முன்வந்தது. இதன் தொடர்ச்சியாக செர்னொபெல் அணு உலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரஷ்ய படைகள் தற்போது அங்கிருந்து பின்வாங்கியுள்ளன.

இந்நிலையில், செர்னொபெல் அணு உலையில் இருந்து பின்வாங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உக்ரைன் பாதுகாப்பு படையினரை ரஷ்ய படையினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 24ஆம் திகதி முதல் தங்கள் படையினரை ரஷ்ய படையினர் பிணைக்கைதிகளாக வைத்திருந்ததாகவும், தற்போது படையினரை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டதாகவும் ரஷ்ய படையினர் மீது உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.   

No comments