புதிய அமைச்சரவை கூடுமா? இல்லையா?



இலங்கையில் புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் சுமார் 20 பேர் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்தது. எனினும், மறுநாள் நிதி, வெளிவிவகார, கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்து பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை வழமைபோல் முன்னெடுத்தார்.

புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதுடன், ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே பிரதமர் தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் பல விடயங்களில் கவனம் செலுத்துவதற்காக கூட்டப்படவிருந்தது.

கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக சற்று முன்னர் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.

No comments