இலங்கை:பாலும் கடன் வாங்குகின்றது!
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton இலங்கைக்கு பால் மற்றும் விலங்குணவுப் பொருட்களுக்கான சலுகைக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு இணங்கி யுள்ளார் என பொது நிர்வாகம், உள்நாட்டலு வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகருடனான கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.

No comments