மாறாத இனவாத மனோநிலையில் சிங்கள தேசம்!இலங்கை எங்கணும் மக்கள் வீதிக்கு வந்து போரடிக்கொண்டிருக்கின்ற போதும் தமிழர் தேசத்தை அடக்கி ஒடுக்குவதில் இலங்கை அரசு தளராத ம னோ நிலையிலுள்ளது.

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாகதீபம் அன்னை பூபதியின் சமாதியில்    19 ம் திகதி செவ்வாய்கிழமை  34 வது  ஆண்டு நினைவேந்தல்   செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேருக்கு எதிராக திங்கட்கிழமை (18) நீதிமன்றம்   தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்து கட்டளையிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

அன்னை பூபதியின் தினம் நாளை அவரது நாவலடியில் அமைந்துள்ள சமாதியில் இடம்பெறவுள்ளது இந்த நிலையில் பாராளுமன்ற உறப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், பாக்கியசெல்வன் அரிநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா  என்றழைக்கப்படும்; இந்திரகுமார் நித்தியானந்தன், தமிழரசுகட்சி இளைஞர் அணித்தலைவர் லோகநாதன் திவாகரன், சீலன் என்றழைக்கப்படும் சபாரெத்தினம் சிவயோகநாதன்,,, கிருஸ்ணபிள்ளை செயோன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் குணராசா குணசேகரம் ஆகியோர் தலைமையில் நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாகவும். காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமிந்த நயனசிறி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குறித்த 11 பேரும்  19 ம் திகதி நடக்கவிருக்கும் இந்த நினைவேந்தலில் செய்வதற்கு தடை உத்தரவு கோரியதையடுத்து நீதிமன்றம் இவர்களுக்கு இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்து கட்டளை பிறப்பித்துள்ளா.


No comments