காலிமுகத்திடல் என்னவாகும்?-தமிழர்கள் பொத்திக்கொண்டிருப்பதே நலம்!
ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக மாறியுள்ள காலிமுக திடலில் இடம் பெறும் தொடர்ச்சியான மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு அடுத்தது என்ன நடக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
இந்நிலையில் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
"கடந்த காலத்தில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட சாத்வீக போராட்டங்களுக்கு என்ன நடந்தது என்பதை வைத்து அனுமானிக்கும்போது பெரும்பாலும் அரசுக்கு ஆதரவளிப்பது போன்ற கோஷங்களுடன் குண்டர் படை ஓன்று களத்தில் இறங்கலாம்.
அதை தொடர்ந்து இரு குழுக்களுக்கும் இடையில் வன்முறை ஏற்படும் போது அதை சாக்காக வைத்துக் கொண்டு கலகம் அடக்கும் படையினர் உட்புகுந்து அனைவரையும் காலிமுகத்திடலில் இருந்து வெளியேற்றுவர்.
அதே வேளை மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த முக்கியஸ்தர்கள் இலக்கு வைத்து கைது செய்யப்படவும் துன்புறுத்தப்படவும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். தவறினால் புலிகள் மறுபடியும் வந்துவிட்டார்கள் என்று பூச்சாண்டி காட்டி மறுபடியும் இனவாதத்தை கிளப்பி தொடர்ந்தும் பதவியில் இருக்க முயற்சி செய்வார்கள்".
Post a Comment