திரிபோசாவும் இல்லை!இலங்கையில் நாடளாவிய ரீதியில் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் சில மாதங்களுக்கு மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து லங்கா திரிபோஷ நிறுவனத்திடம் வினவியபோது, மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments