இலங்கை நாடாளுமன்றிலும் குழப்பம்!
ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரம்புக்கனையில் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருள் இருந்த பவுசரை கொளுத்த முயன்றனர். அதனால்தான், பொலிஸார் ஆகக் குறைந்த பலத்தை பயன்படுத்தினர் என்று தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவ்வாறு கொளுத்தியிருந்தால், ரம்புக்கனை இன்றில்லை என்றார்.
ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிகொண்டிருக்கின்றனார். இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தியினர், கடுமையான கோஷங்களை எழுப்பி, எதிர்ப்பை வெளியிட்டனர்.
Post a Comment