சோறு கேட்ட சிங்கள மக்களிற்கு சூடு பரிசு!

பட்டினிக்கு உணவு கோரி போராடிய அப்பாவி சிங்கள கிராமவாசிகளை சுட்டுக்கொன்றுள்ளது கோத்தாவின் காவல்துறை.

தென்னிலங்கையின் ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டம் காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் பலியாகியுள்ளார்.


மேலும் 12 பேர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் நால்வர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


துப்பாக்கி கூூட்டு சம்பவத்தின் எதிரொலியாக தென்னிலங்கை எங்கணும் வன்முறை வெடித்துள்ளது.



No comments