ஒஸ்கார் நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்தார் வில் ஸ்மித்


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தன் மனைவியை கேலி செய்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளரை நடிகர் வில் ஸ்மித் ஓங்கி அறைந்த சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

94-வது ஆஸ்கர் விருது விழாவை அமெரிக்க நகைச்சுவை நடிகர் கிரிஸ் ரொக் தொகுத்து வழங்கினார். அப்போது சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை பற்றி அறிவிக்கும் போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தோற்றத்தை தொடர்புபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது.

அதில் கோபமடைந்த வில் ஸ்மித் மேடைக்கு வந்து கிரிஸ் ராக்-கின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். பிறகு தன் இருக்கைக்கு சென்ற வில் ஸ்மித், தன் மனைவி குறித்து பேச வேண்டாம் என ஆவேசமாக கூறினார்.

இதனால், விழா அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. வில் ஸ்மித்தின் மனைவி, அலோபிசியா என்னும் தலைமுடி உதிர்ந்து விழும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments