உக்ரைனில் நாடக அரங்கு மீது தாக்குதல்!! 1000 பேருக்கு மேல் பலி! தாக்குதலுக்கு ரஷ்யா மறுப்பு!!


உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள நாடக அரங்கு மீதான குண்டுத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல என ரஷ்யா தெரிவித்துள்ளது.

மரியுபோல் நகரில் நாடக அரங்கு ஒன்றில் 1,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புக்காக தஞ்சம் அடைந்திருந்த நிலையில் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 1,000க்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பெண்களும் குழந்தைகளுமே தங்கியிருந்தாக கூறப்படுகிறது.

தாக்குதலில் திரையரங்கு முழுவதும் உருக்குலைந்து தரைமட்டமானது.

இத்தாக்குதலை ரஷ்யா நடத்தவில்லை என்று மறுத்துள்ளது. அத்துடன் உக்ரைனிய போராளிகளான அசோவ் பட்டாலியன் அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. 

தியேட்டர் குண்டுவெடிப்பை இனப்படுகொலை என்று மரியுபோல் மேயர்  வாடிம் பாய்சென்கோ கூறினார். 

இன்று நடந்ததை விவரிக்க ஒரே வார்த்தை இனப்படுகொலை ஆகும் என்றார்.

No comments