உக்ரைன் - ரஷ்யா போர்: இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் துருக்கியில் பேச்சு


உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பு ஒன்று துருக்கி அங்காராவில் நடைபெற்றுள்ளது என துருக்கியின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோர் சந்தித்தனர். இச்சந்திப்பு ஒரு சிவில் சந்திப்பு என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் விபரித்தார்.

பேச்சுக்களில் எந்தவொரு மிக முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தங்களும் ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. குறிப்பாக இச்சந்திப்பு உயர்மட்ட தொடர்பை ஏற்படுத்துவதாகும் என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி தன்னை ஒரு மத்தியஸ்தராகவுதம் தரகராகவும் கடமையாற்றியுள்ளது.


No comments