சுவிசில் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022!

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து  வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவினை முன்னிட்டு 25வது தடவையாக நடைபெற்ற வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 13.03.2022 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள றுயமெனழசக் உள்ளரங்க மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியானது பொதுச்சுடர்; ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும்இ விளையாட்டு ஆர்வலர்களும்; பங்குபற்றியிருந்தமையோடு, சுற்றுப்போட்டியினை சிறப்பாக நடாத்த தங்களாலான உதவிகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். 

எமது உத்தியோகபூர்வமான இணையத்தளம் ஊடாக போட்டிமுடிவுகளை உடனுக்குடன் நேரஞ்சல் செய்யப்பட்டதுடன்,  பெண்கள் மற்றும் வளர்ந்தோர் போன்ற பிரிவுகளில் போட்டிகளும் நடைபெற்றன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தில் பேர்ண் றோயல் விளையாட்டுக்கழகம் பத்தாவது தடவையாக வெற்றிபெற்று சாதனை படைத்தனர். மேலும் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து போட்டிகள்; சிறப்பாக நிறைவடைந்தன. 

இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வளர்ந்தோர் உதைபந்தாட்டம்:

1ம் இடம் பேர்ண் றோயல் விளையாட்டுக் கழகம்      

2ம் இடம் சூரிச் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்                      

3ம் இடம் லிம்மற்றால் பாடன் விளையாட்டுக் கழகம்.                 

சிறந்த விளையாட்டு வீரர் தங்கராசா ஆகா~;, சூரிச் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்

சிறந்த பந்துகாப்பாளர் வசந்தன் தனுசன், பேர்ண் றோயல் விளையாட்டுக் கழகம்

அதிக இலக்குகளை அடித்த வீரர் தங்கராசா ஆகா~;, சூரிச் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்

சிறந்த பயிற்சியாளர் சிறீகாந்தன், சூரிச் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்

இறுதியாட்ட நாயகன் விஸ்வநாதன் நெலுக்ஸன், பேர்ண் றோயல் விளையாட்டுக் கழகம்

பெண்கள் உதைபந்தாட்டம்:


1ம் இடம் லீஸ் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம்      

2ம் இடம் தாய்மண் விளையாட்டுக் கழகம்                      

3ம் இடம் இளம்சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம்.                 

சிறந்த விளையாட்டு வீராங்கனை நுளin டீயசனயமஉiஇ தாய்மண் விளையாட்டுக் கழகம்

சிறந்த பந்துகாப்பாளர் லுநயட ளுவநiநெசஇ லீஸ் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம்

இறுதியாட்ட நாயகி சர்மிளா செல்வரட்ணம், லீஸ் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம்

No comments