கோத்தா சேர் உரை:மின்துண்டிப்பு இல்லை!இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையில், இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை நாட்டின் எந்தப் பகுதிக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8.00 மணிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மின்சாரம் இருக்கும் என்றும் இரவு 9.30 மணிக்கு பின்னர் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் நாட்டில் சுழற்சிமுறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments