உக்ரைனில் பொதுமக்கள் உயிரிழப்பு: ஐ.சி.சி விசாரணைகள் ஆரம்பம்


ரஷ்யா - உக்ரைன் போரில்  மார்ச் முதலம் திகதி வரை 227 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் 525 பேர் காயமடைந்து உள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. அத்துடன் 870,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. கடந்த 7 நாளில் 2,000 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டவாளர் கரீம் கான் உக்ரைனில் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டவர்கள் தொடர்பிலும் அங்கு மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் தொடங்கினார்.

39 உறுப்பு நாடுகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்குவதாக கரீம் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேநேரம் வன்னி இறுதி யுத்தத்தில் கொத்துக்கொத்தாக உயிரிழந்தபோது இந்த உலகமும் ஐ.நாவும் கண்மூடியே இருந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments